- Advertisement -
ஐ.பி.எல்

உலககோப்பைக்கு முன்னாடி மட்டும் நடந்தா டி20 உலகக்கோப்பை நமக்குத்தான் – லட்சுமணன் ஐடியா

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான ரசிகர்களின் ஆதரவு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிகரித்தது. வருடாவருடம் கிடைக்கும் வரவேற்பினால் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 12 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்தது. ;மேலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் எந்த ஒரு நாட்டிலும் சூழ்நிலை சரியில்லாமல் இருக்கிறது.

- Advertisement -

இதனால் சர்வதேச கிரிக்கெட் முடங்கி போயுள்ளது. இந்தியாவிலும் மே3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனை தாண்டி வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவின் டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதற்கு முன்பதாக இந்த ஐபிஎல் தொடரில் ஆடி அதற்கான பயிற்சிகளமாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர். இது நடக்காமல் போய்விட்டது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடப்பதற்கு முன்பாக ஐபிஎல் தொடரை வைத்தால் அந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு பயிற்சி களமாக இருக்கும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விவிஎஸ் லட்சுமணன் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல் தொடரில் எப்படியாவது ஆடி விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தினால் உலக கோப்பை தொடருக்கு இது ஒரு மிகப்பெரிய முன்னோட்டமாக இருக்கும். வீரர்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது போல் அமையும் என்று தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by