- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி வெற்றிபெற்ற போது நான் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுத இரண்டு போட்டிகள் இவைதான் – வி.வி.எஸ் லக்ஷ்மன்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர். ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். இதில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார்.

- Advertisement -

இதனால் மீதமிருந்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரகானே இந்திய அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தொடரில் ரகானே தலைமையில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிகளையும், ஒரு போட்டியில் டிரா செய்திருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று போது கண்ணீர் விட்டு அழுததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய லட்சுமணன் கூறுகையில் : “ பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியை நான் எனது குடும்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்திய இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடிக்கொண்டிருந்த போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன்.

ஆனால் அவர்களது ஆட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இறுதியாக இந்த போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றது. நான் எனது வாழ்க்கையில் இரண்டு முறை ஆனந்தத்தில் அழுதிருக்கிறேன். முதலில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற போதும் தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது போதும் நான் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுதேன்” என்று லட்சுமணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by