அது நடந்துருந்தா இப்போ பாத்துருக்க முடியாது.. கோலி, ரோஹித்தை பாக்குறது இதுவே கடைசி.. சேவாக் கருத்து

Virender Sehwag 2
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் கிரிக்கெட் மோதுகின்றன. அந்த 2 அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்காததால் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

குறிப்பாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முன்னதாக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 35 வயதை தாண்டி விட்டனர். அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவது இதுவே கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சேவாக் கருத்து:
ஏனெனில் ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செயல்கள் வெளிவந்தன. இந்நிலையில் 2023 உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் அல்லது ரோஹித் ஆகியோரில் ஒருவர் விளையாடியிருக்க மாட்டார் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

அதே போல இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் 2026 டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக விளையாடுவதை பார்ப்பது கடினம் என்றும் சேவாக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எந்த ஒரு சீனியர் வீரருக்கும் இதுவே நம்முடைய கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பது மனதில் இருக்கும்”

- Advertisement -

“எனவே இதை நான் உச்சமாக முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஒருவேளை கடந்த வருடம் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருந்தால் அந்த இருவரில் ஒருவர் இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க மாட்டார். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. எனவே இந்திய அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் இந்த கோப்பையை வெல்வதற்கான பசி அவர்களிடம் இருக்கிறது”

இதையும் படிங்க: 7 மாசத்துக்கு முன்னாடி செஞ்சதை மறக்காதீங்க.. சச்சின் மாதிரியான கோலி இதை செய்வாரு.. கங்குலி ஆதரவு

“இம்முறை இந்தியா வென்றால் இதுவே அவர்களுடைய கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம். இருவரும் இன்னுமொரு ஐசிசி வெள்ளைப் பந்து தொடரில் விளையாட மாட்டோம் என்று சொல்லக்கூடும். அதே சமயம் ஃபிட்டாக நன்றாக செயல்பட்டால் ஏன் விளையாடக்கூடாது? இன்னும் ஒரு வருடம் கூட அவர்கள் விளையாடலாம்” என்று கூறினார்.

Advertisement