டாப்பான வெற்றி. டாப்பான பந்துவீச்சாளர். விராட் போட்ட வைரல் ட்வீட் – ட்வீட் உள்ளே

Kohli

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

bhuvi

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மைதானத்தில் புவனேஸ்வர் குமார் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் கோலி குறிப்பிட்டதாவது :

டாப் வின் அண்ட் டாப் பவுலர் என்று பதிவிட்டு புவனேஷ்வர் குமார் உடன் இருக்கும் புகைப்படத்தினை அவர் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. குமார் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -