- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே போட்டோவை போட்டு இந்திய அளவில் அதிரவைத்த விராட் கோலி – இதுலயும் ஒரு சாதனை இருக்கு

கடந்த 2007-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யால் டி20 உலக கோப்பை தொடரானது அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டிலேயே தோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற எந்த ஒரு தொடரிலும் இந்திய அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக 2024-ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வழக்கமான தனது மூன்றாவது இடத்தை விடுத்து துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கி விளையாடினார். இந்த தொடரின் ஆரம்பம் முதலே தடுமாறி வந்த விராட் கோலி அரையிறுதி வரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதனால் அவர்மீது பெரிய அளவில் விமர்சனமும் எழுந்தது. ஆனால் முக்கியமான இறுதி போட்டியில் அணிக்கு தேவையான 76 ரன்களை குவித்து வெற்றிக்கு காரணமாக அமைந்ததோடு ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதோடு இந்த போட்டியுடன் தான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு விராட் கோலி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய தருணத்தை புகைப்படமாக வெளியிட்டு தற்போது இந்தியாவையே அதிர வைத்ததோடு இந்திய அளவில் ஒரு பெரிய சாதனையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் விராட் கோலி வெளியிட்ட அந்த புகைப்படத்தை மட்டும் : 16.48 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : கேப்டனாக தல தோனியையே மிஞ்சிய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. 2 புதிய உலக சாதனையுடன் 2 வரலாற்று சாதனை

இதற்கு முன்னதாக இந்திய அளவில் அதிக நபர்களால் லைக் செய்யப்பட்ட போட்டோவாக கியாராவின் திருமணம் போட்டோ இருந்தது. அந்த புகைப்படம் 16.26 மில்லியன் லைக்ஸ்களை எடுத்திருந்த வேளையில் தற்போது விராட் கோலியின் இந்த புகைப்படம் 16.48 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -