இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகிய விராட் கோலி..! – காரணம் இதுதான்..?

virat
- Advertisement -

காயம் காரணமாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள கவுண்டி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக கோலி விளையாடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காயத்திலிருந்து விரைவில் குணமடைந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், ஜூன்15-ம் தேதி, அவர் உடற்தகுதித் தேர்வில் பங்குபெற்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குள் முழு உடற்தகுதி பெறுவார் என நம்புகிறோம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிட்சில் கோலி சற்று திணறிவரும் நிலையில், சர்ரே அணிக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால்.
kohli

அவர் அந்தச் சூழ்நிலைக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டு, இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படுவார் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவந்தனர். ஆனால் அவர், தற்போது காயத்தால் அவதியுற்றிருப்பது சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Advertisement