இது கேப்டனாக எனது கடைசி ஐ.பி.எல் தொடர். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் – நெகிழ்வைத்த கோலி

Kohli-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தான் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நேற்று திடீரென ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு மட்டும் ஆர்.சி.பி.அணிக்காக கேப்டனாக செயல்படும் விராட் கோலி அடுத்த ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Kohli

- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் நேற்று துவங்கிய நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விராட் கோலி விளையாட இருக்கிறார். இந்நிலையில் தான் இந்த ஒரு தொடரில மட்டும் தான் கேப்டனாக செயல்பட போவதாகவும் அடுத்த தொடரில் ஆர்.சி.பி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையையும் ஆ.சி.பி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெங்களூரு அணி நிர்வாகமும் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து பேசியுள்ள விராட் கோலி கூறுகையில் :

ஆர்சிபி அணிக்காக இதுதான் கேப்டனாக நான் செயல்பட போகும் கடைசி தொடர். இதன் பின்னர் அணியின் வீரராக நான் தொடர்ந்து விளையாடுவேன். அதுமட்டுமின்றி நான் ஐபிஎல் தொடரில் விளையாடும் கடைசி போட்டி வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே தான் விளையாடுவேன் என்று ரசிகர்களுக்கு உறுதிமொழியை அளித்துள்ளார்.

அது மட்டுமின்றி ஆர்.சி.பி. அணியின் அனைத்து ரசிகர்களுக்கும், என்னை நம்பிய, என்னை ஆதரிக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி என நெகிழ்ச்சியாக விராட் கோலி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement