- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியிடம் இப்போது சரக்கு இருக்குமா ? என்பது சந்தேகம் தான். நான் அவரை தேர்வு செய்யமாட்டேன் – தேர்வுக்குழு நபர் ரிப்போர்ட்

தோனி கடந்த 2019 உலக கோப்பை தொடரில் இருந்து எந்த வகையான கிரிக்கெட்டும் ஆடவில்லை. அவரிடமிருந்து ஓய்வு குறித்து எந்த வகையான உறுதியான பதிலும் வெளிப்படவில்லை. இதன் காரணமாக அவரை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது பிசிசிஐ. இதனால் தோனி மீண்டும் அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் 2020ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடரில் ஆட வேண்டும் என அவர் நினைப்பதாக தெரிகிறது. இதனை மனதில் வைத்து தற்போது கடுமையாக பயிற்சி செய்து வந்தார் தோனி. மேலும், ஐபிஎல் தொடர் நடைபெற்றால் அதில் அற்புதமாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து விடலாம் என்றே கருதி இருந்தார்.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடர் கரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்து முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் வேங்கடபதி ராஜீ பேசியுள்ளார். இவர்தான் 2007 ஆம் ஆண்டு தோனியை கேப்டன் ஆக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். தோனி கேப்டனாக அறிவித்த தேர்வு குழுவில் இடம்பெற்றவரும் இவர்தான்.

இந்நிலையில் இவர் தோனியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள இவர் இதுகுறித்து கூறியதாவது : எப்படிப்பட்ட ஒரு வீரரும் மீண்டும் மீண்டும் நன்றாக ஆடி தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் .அது சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடராக இருந்தாலும் சரி . நீங்கள் அனைவருக்கும் உங்களை நிருபித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் அணியிலிருந்து நடையைக் கட்ட வேண்டியதுதான்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. உள்ளூர் தொடர்களை விட அது மிகவும் அதிகமான உடல் தகுதியையும் திறமையையும் கேட்கும். இதன் காரணமாக தற்போது 38 வயதான தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடினம் என்று தெரிகிறது. அவரை தேர்வு செய்ய யாருக்கும் அவசியமில்லை என்று கூறியுள்ளார் வெங்கடபதி ராஜு.

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சேவாக் ஆகியோர் தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று கூறிய நிலையில் வெங்கடபதி ராஜு தோனி மீண்டும் அணியில் இடம்பிடிக்க முடியாது என்று கூறியுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு சற்று சோகமான செய்தியாக இது மாறியுள்ளது.

- Advertisement -
Published by