- Advertisement -
ஐ.பி.எல்

விதிகளை மீறிய இளம் வீரர்கள்…மும்பை அணி தண்டனை வழங்கியது ! – காரணம் இதுதான் ?

தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் விளையாடிவரும் மும்பை அணியின்தொடர் தோல்விகளால் ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர்களை சமூக வலைத்தளங்களில் கிழித்தெடுத்து வருகின்றனர். தற்போது சமீபத்தில் மும்பை அணியில் உள்ள ஒரு சில வீரர்கள் செய்த செயலால் தற்போது மேலும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர் .

இந்த ஐபில் போட்டியில் மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகள் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஐபில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபில் தொடங்கிய போதே அந்த அணியை விளம்பரபடுத்தாத அந்த அணியில் உள்ள வீரர்களின் எமோஜி எனப்படும் கார்ட்டூன் ஸ்டிக்கர்களை வெளியிட்டது மேலும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் இருக்கும் அந்த அணியின் ஜெர்ஸி ஒன்றும் வெளியிடப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் இளம் வீரார்களான இஷான் கிஷண், அனுகுல் ராய், ராகுல் சாகர் ஆகிய மூவரும் அந்த ஜெர்ஸியை அணிந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்கலில் வெளியாகி ரசிகர்கள் அதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

இவர்கள் எதற்காக இந்த ஆடைகளை அணிந்தார்கள் என்று பார்த்தல், மும்பை அணி வீரர்கள் அனைவரும் போட்டி இல்லாத நேரங்களில் ஜிம்ல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டுமாம். அவ்வாறு உடற்பயிச்சியில் ஈடுபடாதா வீரர்கள் இந்த ஜெர்சியை அணிய வேண்டும் என்பது தான் தண்டனையாம் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -