இந்திய வீரர்களுடன் அவங்க குடும்பமும் வரலாம். பட் ஒன் கண்டிஷன் – இங்கிலாந்து நாட்டு அரசு வழங்கிய அனுமதி

ritika

இந்திய அணி அடுத்ததாக ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்படி மொத்தம் 6 போட்டிகள் கொண்ட இந்த மிகப்பெரிய தொடருக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் 14 நாட்கள் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Ashwin

மேலும் ஜூன் இரண்டாம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து பயணிக்கும் இந்திய அணியின் வீரர்கள் இங்கிலாந்தில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் அங்கு நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இந்திய பெண்கள் அணிக்கும் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர் இருப்பதால் இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரண்டு அணிகளுமே தற்போது இங்கிலாந்து பயணிக்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இங்கிலாந்து வருவதற்கு பிரிட்டன் அரசிடம் பிசிசிஐ அனுமதி கேட்டு இருந்தது. ஏனெனில் நான்கு மாதங்கள் கொண்ட இந்த மிகப்பெரிய தொடருக்கு வீரர்களின் குடும்பமும் அவருடன் இருந்தால் அவர்களுக்கு சற்று இலகுவாக இருக்கும் என்பதனால் வீரர்களின் குடும்பத்தையும் இங்கிலாந்துக்கு வர அனுமதி கேட்டிருந்தது.

Prithi-Ashwin

இந்நிலையில் பி.சி.சி.ஐ யின் இந்த வேண்டுகோளினை ஏற்று இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் வருவதற்கு பிரிட்டன் அரசு தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர்களுடன் வரும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் வீரர்களை போன்றே பயோ பபுள் விதிமுறைகளை கடைபிடித்து அவர்களுடன் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

anushka

இதனால் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் இங்கிலாந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டு தொடர்களுக்கு சென்றிருந்தாலும் தற்போது கொரோனா வேளையில் இந்த விடயம் சற்று சிரமமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement