இந்திய அணியில்இரண்டு மாற்றங்கள்..! தமிழக வீரருக்கு வாய்ப்பு தருவாரா கோலி..! – விவரம் உள்ளே

Suresh Raina

இங்கிலாந்து மற்றும் இந்திய வணிக மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. 3 ஒரு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
raina
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைபற்றியது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜூலை 17) ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் இரு அணிகளும் கடுமையான பயிற்சயில் ஈடுபட்டு வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி பெரும் 4வது தொடர் வெற்றியாக இது அமையும். எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
karthik
தினேஷ் கார்த்திக் சமீப காலமாக நல்ல பார்மில் இருக்கிறார். நிதாஸ் கோப்பை போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் சேர்க்கப்பட்டும் அவருக்கு வாய்ப்பளிக்கபடமால் தான் இருக்கிறது. அதே போல காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய புவனேஸ்வர் குமார் குணமடைந்திருந்தால்,அவர் இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்பும் உள்ளது.