- Advertisement -
உலக கிரிக்கெட்

அதுல மட்டும் போறேன்னு நினைக்காதீங்க.. இதான் கடைசி நாள்.. ட்ரெண்ட் போல்ட் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. கேன் வில்லியம்சன் தலைமையில் இந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே நியூசிலாந்து தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியை சந்தித்த நியூஸிலாந்து ஆரம்பத்திலேயே சூப்பர் 8 வாய்ப்பை நழுவ விட்டது.

அந்த நிலையில் உகாண்டாவுக்கு எதிராக வென்ற அந்த அணி நேற்று பப்புவா நியூ கினியாவுக்கு எதிராகவும் ஆறுதல் வெற்றி பெற்றது. முன்னதாக இந்தத் தொடரே தம்முடைய கடைசி டி20 உலகக் கோப்பை என்று நட்சத்திர நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் அறிவித்திருந்தார். ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக ஏற்கனவே அவர் 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

விடை பெற்ற போல்ட்:
இருப்பினும் நாட்டுக்காக ஐசிசி தொடரில் மட்டும் விளையாடுவேன் என்று ட்ரெண்ட் போல்ட் அறிவித்திருந்தார். அதன் காரணமாக டி20 உலகக் கோப்பையில் ஓய்வு பெற்றாலும் அடுத்ததாக பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நியூசிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது இதுவே கடைசி நாள் என்று ட்ரெண்ட் போல்ட் திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியின் முடிவில் அவர் உருக்கத்துடன் பேசியது பின்வருமாறு. “இது கொஞ்சம் வித்தியாசமாக உணர்கிறது. கடந்த சில நாட்களில் உணர்வுகள் வெளிப்படையாகவே இருக்கின்றன. இதற்கு மேல் நான் யோசிக்கவில்லை”

- Advertisement -

“இப்போது இந்த கருத்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். கடைசியாக ஒரு முறை இப்போட்டியில் விளையாடியதை ரசித்தேன். இனிமேலும் சொல்ல மாட்டேன் என்ற தைரியம் உள்ளது. ஆனால் நியூசிலாந்துக்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். நியூசிலாந்து அணியுடன் இதுவே என்னுடைய கடைசி நாள் என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பைக்கு பிறகு ஜடேஜாவுக்கு வாய்ப்புகள் குறையும்.. அவரது இடத்தை பிடிக்கப்போகும் இளம்வீரர் யார்?

அவருடைய இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மகத்தான வீரர்களுக்கு சவாலை கொடுத்த டிரெண்ட் போல்ட் நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். அந்த வகையில் 78 டெஸ்ட், 114 ஒருநாள், 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 317, 211, 83 என மொத்தம் 611 விக்கெட்டுகளை எடுத்து மகத்தான வீரராக விடை பெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -