- Advertisement -
ஐ.பி.எல்

ஹைதராபாத் 21/3.. அதீத தைரியத்தால் நழுவவிட்டாரா கமின்ஸ்? ஹெட் மோசமான சாதனை.. தெறிக்க விட்ட ஸ்டார்க்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கியது. அதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் சேசிங் செய்த அணிகள் வெற்றி பெறுகின்றன. அந்த சூழ்நிலையில் மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பட் கமின்ஸ் தைரியமாக தங்களுடைய துவக்க வீரர்களை நம்பி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். குறிப்பாக ஆரம்பத்திலேயே பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயித்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கலாம் என்ற திட்டத்தை கமின்ஸ் கையிலெடுத்தார்.

- Advertisement -

அசத்திய ஸ்டார்க்:
ஆனால் அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரின் 5வது பந்தில் மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் அபிஷேக் சர்மா 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்த ஓவரின் கடைசி பந்தில் வைபவ் அரோரோ வேகத்தில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரின் ஃபைனலில் கோல்டன் டக் அவுட்டான 3வது துவக்க வீரர் என்ற மோசமான சாதனை அவர் படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2013இல் ஆதித்யா தாரே, 2020இல் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஃபைனலில் கோல்டன் டக் அவுட்டானார்கள். இந்த தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடிய அவர் குவாலிபயர் 1 போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டானதை போலவே இறுதிப் போட்டியிலும் அவுட்டாகி ஹைதராபாத் காலை வாரினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதியை 9 (13) ரன்களில் அவுட்டாக்கி ஸ்டார்க் தெறிக்க விட்டார்.

- Advertisement -

அதனால் 21/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு அடுத்ததாக வந்த ஐடன் மார்க்கம் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த நித்திஷ் ரெட்டி 13 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதன் காரணமாக டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பட் கமின்ஸ் முதலில் பேட்டிங் செய்த முடிவு தவறோ என்று வருடம் அளவுக்கு ஹைதராபாத் தடுமாறுகிறது.

இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயரை குறை சொல்லாம.. பேட்ஸ்மேன்களிடம் வாழ இதை செய்ங்க.. பவுலர்களுக்கு அஸ்வின் அட்வைஸ்

மறுபுறம் இந்த வருடம் பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்குவதே ஹைதராபாத் அணியின் பலமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போட்டியில் அதை உடைத்த கொல்கத்தா ஆரம்பத்திலேயே நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. அதனால் சற்று முன் வரை ஹைதராபாத் 10 ஓவரில் 61/4 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -