13 வருடத்தில் ஒருமுறை கூட ஐ.பி.எல் ட்ராபியை தொட்டுப்பார்க்காத 5 டி20 சூப்பர் ஸ்டார்கள் – லிஸ்ட் இதோ

Ipl
- Advertisement -

ஐபிஎல் தொடர் தற்போது வரை 12 வருடங்கள் முடிவடைந்துவிட்டது. இதில் மும்பை 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன. இதில் பெங்களூரு, பஞ்சாப், டெல்லி போன்ற அணியில் இருக்கும் வீரர்கள் கோப்பையை வெல்ல தகுதியானவர்கள். ஆனால் தற்போது வரை கோப்பையை வென்ற அணியில் இருந்ததில்லை அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம்.

Mishra

- Advertisement -

அமித் மிஸ்ரா :

இந்திய அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 150 போட்டிகளில் விளையாடி 160 விக்கெட்டுகள் எடுத்து விட்டாலும் இந்த 13 தொடர்களில் ஒரு முறை கூட இவர் கோப்பையை வென்ற அணியில் இருந்ததில்லை.

rashid

ரசித் கான் :

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளராக திகழும் இவர் உலகின் பல டி20 அணிகளுக்கு விளையாடி கோப்பைகளை வெல்ல காரணமாக திகழ்ந்துள்ளார். ஆனால் 2017ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடிக்கொண்டிருக்கும் ரசித்தான் தற்போது வரை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இருந்ததில்லை.

ஏபி டிவில்லியர்ஸ் :

- Advertisement -

முதலில் டெல்லி அணிக்கும் தற்போது 10 வருடங்களாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் ஏபி டிவில்லியர்ஸ் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் கிட்டத்தட்ட 5000 ஐபிஎல் ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் தற்போது வரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் அணியில் இல்லை.

Gayle

கிறிஸ் கெய்ல் :

- Advertisement -

முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் பின்னர் பெங்களூரில் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ் கெயில் உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் கிறிஸ் கெய்ல் தற்போது வரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli

விராட் கோலி :

ஐ.பி.எல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்து விளையாடிக் கொண்டிருக்கும் கோலி 13 ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ள இவர் தற்போது வரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை தொட்டுப் பார்க்கவில்லை என்பது வருத்தமான ஒரு விடயமே.

Advertisement