சிஎஸ்கே ரசிகர்கள் சார்பாக.. ஒற்றைப் பதிவால் மொத்த ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தேஷ்பாண்டே

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து முதல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி ஒரு மாதமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்றது.

குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி நடப்பு சாம்பியன் சென்னை வீட்டுக்கு அனுப்பியது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்றதால் அந்த வெற்றியை பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடினர். குறிப்பாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனிக்கு கை கொடுக்க நேரமில்லாத அளவுக்கு ஆர்சிபி வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

தேஷ்பாண்டே பதிலடி:
அத்துடன் களத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமாக கலாய்த்து கொண்டனர். அது போக தெருக்களில் தோல்வியால் வெறுப்பில் அமைதியாக சென்ற சிஎஸ்கே ரசிகர்களை வம்படியாக ஆர்சிபி ரசிகர்கள் கலாய்த்தனர். அது மட்டுமல்லாமல் தோல்விக்குப்பின் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த சிஎஸ்கே அணி பேருந்துக்கு முன்பாக ஆர்சிபி கொடியை காட்டி பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடினர்.

இவை அனைத்தையும் விட சில இடங்களில் சிஎஸ்கே பெண் ரசிகைகளிடம் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் தகாத முறையில் நடந்து கொண்ட சில வீடியோக்களும் வைரலாகின. அந்த சூழ்நிலையில் மே 22ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதனால் 2008க்குப்பின் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு அணி பரிதாபமாக வெளியேறியது. அதன் காரணமாக தற்போது தங்களை கிண்டலடித்த ஆர்சிபி ரசிகர்களை தேடிச் சென்று சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த வரிசையில் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் “பெங்களூருவால் முடியாது” எனும் பெயரைக் கொண்ட ரயில்வே நிலையத்தில் ஒரு ரயில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்தனர்.

இதையும் படிங்க: சிஎஸ்கே’வை ஜெயிச்சா மட்டும் கோப்பை தரமாட்டாங்க.. யாருமே 1000 ரன்ஸ் அடிக்கல.. ஆர்சிபி தோல்வி பற்றி ராயுடு பதிலடி

அதாவது பெங்களூரு நகருக்கு “பெங்களூருவால் எப்போதும் கோப்பையை வெல்ல முடியாது” என்ற மற்றொரு பெயர் இருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்தனர். அதை சென்னை வீரர் துஷார் தேஷ்பாண்டே தம்முடைய இன்ஸ்டாகிராமில் “சிஎஸ்கே ரசிகர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள்” என்ற தலைப்புடன் மறுபதிவிட்டு மொத்த ஆர்சிபி ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்தார். இருப்பினும் அதற்கு ஆர்சிபி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை அவர் பின்னர் டெலீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement