- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த ஐபிஎல் தான் இவர்களுக்கு கடைசி ஐபிஎல், யார் அந்த 4 நட்சத்திர வீரர்கள் – உள்ளே பாருங்க

உலகளவில் புகழ்பெற்ற இந்திய ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008 ஆண்டுமுதல் தொடங்கி பத்தாண்டுகள் நிறைவுசெய்து தற்போது பதினொராவது சீசனாக வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடை முடிந்தபின் மீண்டும் களமிறங்குகின்து சென்னை சூப்பர் கிங்ஸ். இது இன்னும் இந்த ஐபிஎல் மீதான ஈர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தான் சில கிரிக்கெட் வீரர்களுக்கு கடைசி ஐபிஎல்.
அதில் முக்கியமாக இந்த ஐபிஎல்-யில் இருந்து விடைபெற போகும் நான்கு வீரர்களை பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

1. ஹர்பஜன்சிங்.

இந்திய அணியின் கஐமிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங்.
கோவக்கார வீரரான இவர் பலமுறை மைதானத்திலேயே எதிரணி வீரர்களுடன் மல்லுக்கு நிற்பவர். இந்திய அணி பல தொடர்களையும் வெற்றிகளையும் குவிக்க உதவியவர்.

- Advertisement -

ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் 2008ம் ஆண்டுமுதல் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடியவர். இந்தமுறை சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.ஏற்கனவே டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் ஹர்பஜன்சிங் வயதின் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்தும் தானே விருப்பப்பட்டு ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளது.

2. யுவராஜ்சிங்.

- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் யுவராஜ்சிங்.இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அசத்தி உலகசாதனை புரிந்தவர்.ஐபிஎல்-யில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ்சிங் இந்தமுறை பஞ்சாப் அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

பற்றுநோயால் அவதிப்பட்ட அவர் முழுமையாக அதிலிருந்து விடுபட்டுவிட்ட போதிலும் அவுட் ஆப் பார்மில் இருந்து வருவதால் இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை.வயதின் காரணமாக இவரும் இந்த ஐபிஎல்-வுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

- Advertisement -

3. கிரிஸ் கெய்ல்.

வெஸ்ட் இண்டீஸ் வீரரான கெய்லை கண்டால் எதிரணியினர் அஞ்சி நடுங்கிய காலமெல்லாம் உண்டு. களத்தில் இறங்கிவிட்டால் ஆட்டத்தின் போக்கை நேரெதிராக திசை திருப்பிடும் ஆக்ரோஷ ஆட்டக்காரர்.ஐபிஎல்-ஐ பொறுத்தவரையிலும் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு அவுட் ஆப் பார்மில் இருப்பதால் முதல் நாளில் அவரை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

ஒருகாலத்தில் ஐபிஎல்-யில் கலக்கிய இவருக்கா இந்த நிலையென ரசிகர்கள் அதிர்ச்சியடைய இரண்டாம் நாள் இறுதியில் பஞ்சாப் அணி கெய்லை ஏலத்தில் எடுத்தது.இவரும் வயதின் காரணமாகவே இந்த ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

4. கவுதம் கம்பீர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரனா இவர் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பெரிதும் உதவியவர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர்.

மிகச்சிறந்த பேட்ஸ்மனான இவர் ஐபிஎல்-யில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார்.இந்தாண்டு டெல்லி அணிக்காக விளையாட உள்ள அவருக்கும் இதுவே கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

- Advertisement -