ரோஹித்துக்கு 37 அது ஓகே.. ஆனா 35 வயசுலயே கோலி மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவிக்க காரணம் என்ன? – பின்னால் இருக்கும் விடயம்

Ro-Ko-Ja
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நடைபெற்று முடிந்த 2024-டி20 உலகக்கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தாலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் சீனியர் வீரர்களாக விளையாடி வரும் இவர்கள் மூவரும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்கி இருந்தனர். இப்படி தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தனர்.

- Advertisement -

அப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அவர்கள் மூவரும் திடீரென அடுத்தடுத்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனியர் வீரர்களான இவர்கள் மூவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவிக்க காரணமே புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கும் கம்பீர் தான் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேற இருப்பதை அறிவித்தபோது புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த கம்பீர் பிசிசிஐ-க்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தார். அதில் அணியில் உள்ள சீனியர் வீரர்களை நீக்க வேண்டும் என்றும் மூன்று வகையான அணிக்கும் தனித்தனியே வீரர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

மேலும் ஒரு அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு மற்ற வடிவங்களில் இடம் கிடைக்காது என்பது போன்ற பல்வேறு நிபந்தனங்களை அவர் பிசிசிஐ-யிடம் கூறியதாக தெரிகிறது. இதையெல்லாம் கவனித்த இந்த மூவரும் தாங்கள் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டிய மோசமான சூழல் வந்திடக் கூடாது என்பதினாலும் டி20 உலக கோப்பை வென்ற கையோடு அணியிலிருந்து வெளியேறினால் அது மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் என்பதனாலே அவர்கள் மூவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : என் கடைசி மூச்சு இருக்கும் வரை சூரியகுமார் யாதவின் இந்த செயலை மறக்கமாட்டேன் – இர்பான் பதான் புகழாரம்

ஒருவேளை அவர்கள் ஓய்வு முடிவை அறிவிக்காமல் மீண்டும் விளையாட நினைத்திருந்தால் புதிய பயிற்சியாளராக வரும் கம்பீர் அவர்களை அணியில் இருந்து நீக்க கூட வாய்ப்பு இருந்திருக்கும். எனவே அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகவே அவர்கள் மூவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement