ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை வென்றது. டி20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தங்கராஜ் நடராஜனின் பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நடராஜன். இவர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்க தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதன்மூலம் டி20 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. தனது முழு திறமையை வெளிப்படுத்தினார் நடராஜன். இதன்மூலம் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை பெற்றிருந்தார். இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் நடராஜனை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி வரும் நடராஜனுக்காக நடிகர் அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் பெரிய அளவிலான கட்-அவுட்களை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அந்த கட்-அவுட்டில் ஆரம்பம் அஜித் மற்றும் நடராஜன் இருவரும் இருக்கும்படி அமைந்திருந்தது.
அத்தோடு அந்த கட்-அவுட்டில் “Congratulation ! To All BCCI Indian Cricket Players For Winning T20 Series Against Australia On Behalf Of Thala Ajith Fans” என்று எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ‘இன்னும் கொஞ்ச நேரத்துல அலப்பறை ஆரம்பம், தல நடராஜனின் அதிரடியை பார்ப்பீங்க’ என்று முன்கூட்டியே ட்விட்டரில் தல ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மைதானத்தில் தமிழ் நடிகர் அஜித் ரசிகர்கள் நடராஜனுக்காக செய்த இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.