- Advertisement -
உலக கிரிக்கெட்

ஒருநாள், டி20 யில் பட்டையை கிளப்பி டெஸ்டில் சாதிக்க தவறியவர்கள் – லிஸ்ட் இதோ

50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவது டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை விட எளிதான ஒன்றாகும். ஆனால் டெஸ்ட் போட்டியில் ஆட நிலைத்த நீடித்த ஆட்டம் தேவை. பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தொடர்ந்து களத்தில் நின்று ஆட வேண்டும். அப்படி மற்ற இரண்டு விதமான போட்டிகளிலும் நன்றாக ஆடியும் டெஸ்ட் போட்டிகளில் இடம் கிடைக்காத 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஆன்ட்ரே ரசல் :

- Advertisement -

அதிரடியாக ஆடிய ருத்ர தாண்டவம் செய்வதில் வல்லவர். தற்போது இவருக்கு 32 வயதாகிறது. குறுகிய ஓவர் போட்டிகளில் நன்றாக ஆடுபவர் என்ற பெயரைப் பெற்றவர். டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு 2010ஆம் ஆண்டு இடம் கிடைத்தது. ஆனால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் 104 ரன்கள் கொடுத்துள்ளார். தற்போது பத்து வருடம் ஆகிவிட்டது அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை.

ரோகித் சர்மா :

- Advertisement -

இவருக்கு கண்டிப்பாக டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். 2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அப்போது பல காரணத்தால் ஆனால் முடியவில்லை. பின்னர் 2013-ம் ஆண்டு மீண்டும் அவருக்கு இடம் கிடைத்தது. பின்னர் மீண்டும் சொதப்பினார் தற்போது தனது தலைமையில் 33 வயதான இவருக்கு மீண்டும் துவக்க வீரருக்கான இடத்தை கொடுத்துள்ளார் விராட் கோலி .

யுவராஜ் சிங் :

- Advertisement -

சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி வீரர் இவரும் பெரிதாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ருத்ரதாண்டவம் ஆடியவர். 2003 ஆம் ஆண்டு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான போது சதம் அடித்து அசத்தி இருந்தார். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு வெகு சீக்கிரம் அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். 17 வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர் வெறும் 40 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகித் அப்ரிடி :

- Advertisement -

எந்தவொரு பந்துவீச்சாளரையும் அடித்து துவம்சம் செய்வதில் வல்லவர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பட்டையைக் கிளப்புவார். இவர் ஒருநாள் போட்டிகளில் 90 பந்துகளுக்கு மேல் களத்தில் நின்றதில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது அணிக்காக வெறும் 27 முறை மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் 400 முறை ஆடியுள்ளார்.

இயன் மார்கன் :

அயர்லாந்தை சேர்ந்தவர் ஆனால் இங்கிலாந்து அணிக்காக தற்போது ஆடி வருகிறார். உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்காக வென்று கொடுத்த கேப்டன் இவர்தான். தற்போது 33 வயதான இவர் 236 ஒருநாள் போட்டிகளிலும் 89 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 13 சதங்களும் 59 அரை சதங்களும் அடித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 700 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதனால் மீண்டும் அவருக்கு அந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -
Published by