டி20 தரவரிசையில் 3-வது இடத்தில் இந்திய அதிரடி வீரர்..! – யார் தெரியுமா..?

Hrdhik

இந்திய வீரர் கே.எல்.ராகுல் டி20 போட்டி தரவரிசைப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.டி20 போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் 172 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய டி20 அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதல் இடம்பிடித்துள்ளார்.
rahul
தரவரிசைப்பட்டியலில் 46-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான், 44 இடங்கள் முன்னேறி 2-வது இடம்பிடித்துள்ளார். இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக ஆடி, சதம் விளாசிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் முதன்முறையாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இது இந்திய அணி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தரவரிசைப்பட்டியலில் ரோகித் சர்மா 11-வது இடத்திலும், வீராத் கோலி 12-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.பந்துவீச்சாளர் தரவரிசைப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் முதல்இடத்திலும் இந்திய வீரர் சஹால் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்திய அணி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும் இங்கிலாந்து 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.

Advertisement
SOURCEvikatan