2011, 2013க்கு பின் இந்தியாவால் உலகக்கோப்பையை ஏன் வாங்க முடியவில்லை – சுரேஷ் ரெய்னா விளக்கம்

Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா என பல உலகத்தரம் வாய்ந்த தரமான வீரர்கள் இருக்கும் போதிலும் கடந்த 10 வருடங்களாக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வென்றது.

World

- Advertisement -

அதன்பின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டுக்கும் நடந்த உலக கோப்பையில் ஒன்றை கூட வெல்ல முடியாமல் இந்தியா தடுமாறி வருகிறது. கடந்த 2014, 2015, 2016, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா நாக்-அவுட் சுற்றுக்கு தொடர்ச்சியாக தகுதி பெற்று உலகக் கோப்பையை முத்தமிட மிக அருகில் சென்ற போதிலும் நாக்-அவுட் சுற்றில் அடுத்தடுத்த படுமோசமான தோல்விகளால் வெறும் கையுடன் திரும்பி வருகிறது.

என்ன காரணம்:
ஆனால் கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் ஒரு படி மேலே சென்ற விராட் கோலி தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோற்றதுடன் நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் அவமானத்தைச் சந்தித்தது. இத்தனைக்கும் உலககோப்பை தவிர எஞ்சிய அனைத்து தொடர்களிலும் எதிரணிகளை பந்தாடும் இந்தியா உலகக்கோப்பை என்று வந்தால் ஏதோ ஒரு விஷயத்தில் சறுக்கி விடுகிறது.

INDvsPAK

இந்நிலையில் சமீப காலங்களாக இந்தியாவால் ஏன் ஒரு உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற முக்கியமான காரணத்தை இந்தியாவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு “ரஞ்சி கோப்பையில் நான் முதல் முதலாக விளையாட துவங்கியபோது “நீ பந்து வீச வேண்டும்” என அடிக்கடி எங்களின் பயிற்சியாளர் ஞானேந்திர பாண்டே கூறுவார். அதன் காரணமாக வெறும் 5 பந்து வீச்சாளர்களை நம்பி இருக்கும் ஒரு அணியின் கேப்டனுக்கு 8 – 10 ஓவர்கள் பந்து வீச கூடிய 6 அல்லது 7வது பந்துவீச்சாளர் கிடைப்பார். சொல்லப் போனால் அதன் காரணமாகத்தான் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலககோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை நம்மால் வெல்ல முடிந்தது” என கூறியுள்ளார்.

- Advertisement -

உண்மை தானே:
அவர் கூறுவது போல எம்எஸ் தோனி இந்தியாவின் கேப்டனான இருந்த ஆரம்ப காலகட்டங்களில் இந்திய அணியில் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் போன்ற பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது பகுதிநேர பந்துவீச்சாளர்களாக மாறி எதிரணிகளை திணறடிப்பார்கள். பொதுவாகவே இதுபோன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இருந்தால் முதன்மையான 5 பந்துவீச்சாளர்கள் சொதப்பும் போது அவர்கள் அந்த ஓவர்களை ஈடுகட்டி வெற்றிக்கு உதவி புரிவார்கள்.

worldcup

மேலும் அது போன்ற பகுதிநேர வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது அந்த அணியின் கேப்டனுக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதுபற்றி சுரேஷ் ரெய்னா மேலும் பேசியது பின்வருமாறு. “2011 உலக கோப்பை காலகட்டங்களில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், யூசுப் பதான் மற்றும் நான் ஆகிய அனைவருமே பந்துவீசுபவர்களாக இருந்தோம். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அல்லது சமீபத்தில் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் நாம் தோற்றம். ஒரு நல்ல 6வது பந்துவீச்சாளர் இல்லாமல் போனதே அந்த தோல்விக்கு காரணமாகும். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச முயற்சித்து வருகிறார். அவர் அந்த முயற்சியில் மிகவும் தீவிரமாக ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு உதவி கிடைக்கும்” என்ற உண்மையான காரணத்தை சுரேஷ்ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

பந்துவீச முடியாதா:
அவர் கூறுவது போல சமீப காலங்களாக இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக இருப்பவர்கள் பேட்டிங் மட்டும் தான் செய்வேன் என அடம்பிடிக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் ஆல்-ரவுண்டராக இருந்தபோதிலும் பந்துவீச முடியாது என அடம்பிடிப்பது இந்தியாவிற்கு பெருத்த பின்னடைவை கொடுத்து வருகிறது.

suresh-raina

அது பற்றி சுரேஷ் ரெய்னா மேலும் பேசியது பின்வருமாறு. “கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம் 6வது பந்துவீச்சாளராக முதலில் பந்து வீச தொடங்க பின்னர் முதன்மையான பந்துவீச்சாளர்கள் பவுலிங் செய்ய வந்தார்கள். இதுதான் இந்திய அணியில் உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சனையாகும். சூர்யகுமார் யாதவ் பந்துவீச கூடியவர். ரோகித் சர்மா கூட காயத்திற்கு முன்பாக பந்துவீசி கொண்டிருந்தார்.

- Advertisement -

எனவே யாராவது ஒருவர் பொறுப்பை உணர்ந்து 6 – 8 ஓவர்களை வலைப் பயிற்சியில் பந்துவீசி பழக வேண்டும். பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது நியாயமானது என்றாலும் ஒரு அரை மணி நேரம் நாட்டுக்காக வலைப்பயிற்சியில் பந்து வீசி பழக வேண்டும். ஒரு தடவை நீங்கள் அதை விரும்ப ஆரம்பித்து விட்டால் 6 – 7 ஓவர்களை வீசாமல் நீங்கள் விளையாட மாட்டீர்கள்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : INDvsWI T20: அறிமுக வீரருக்கு அணியில் இடம். ரோஹித் சர்மா அருமையான தேர்வு – பிளேயிங் லெவன் இதோ

அவர் கூறுவது போல தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் 6வது பந்துவீச்சாளராக விளையாட தேர்வு செய்யப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் காரணமாக இந்தியா படு மோசமான வைட்வாஷ் தோல்வியை சந்தித்தது. இதுமட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே இந்திய அணியில் பகுதிநேர பந்துவீச்சாளர்களுக்கு பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டுள்ளதே ஐசிசி தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என சுரேஷ் ரெய்னா வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement