- Advertisement -
ஐ.பி.எல்

யுவராஜ் வளர்ப்பு.. அவருக்கு பதிலா அபிஷேக்கை டி20 உ.கோ கூட்டிட்டு போங்க.. ரெய்னா, ஹர்பஜன் கோரிக்கை

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஹைதராபாத் தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மே 24ம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதனால் மே 26ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள தகுதி பெற்ற ஹைதராபாத் வெற்றிக்கு அபிஷேக் சர்மா கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

இந்த வருடம் ஆரம்பம் முதலே டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து ஓப்பனிங்கில் எதிரணிகளை பந்தாடும் அவர் இதுவரை 482 ரன்களை 207 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி வருகிறார். இருப்பினும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் அவர் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் பந்து வீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து ஹைதராபாத் ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

யுவராஜ் வளர்ப்பு:
இந்நிலையில் அபிஷேக் சர்மா முன்னாள் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் வளர்ப்பு என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் சர்மாவுக்கு யார் பயிற்சி கொடுக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? 2011 உலகக் கோப்பையின் ஹீரோ யுவராஜ் சிங். யுவராஜ் இந்தியாவுக்கு தற்போது வளரும் நட்சத்திரத்தை கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் 4 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எனவே அவர்களில் ஒருவரை நீக்கி விட்டு அபிஷேக் ஷர்மாவை அழைத்துச் செல்லுங்கள் என்றும் ஹர்பஜன் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் ஷர்மா கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும்”

- Advertisement -

“அவர் இந்தியாவுக்காக விளையாட தகுதியானவர். இந்திய அணியில் 4 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இப்போதும் இந்தியா தங்களுடைய அணியில் மாற்றங்களை செய்வதற்கு ஒரு நாள் இருக்கிறது. இந்திய அணிக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் பங்காற்றக்கூடிய அவரைப் போன்ற வீரர்கள் தான் தேவை” என்று கூறினார். முன்னதாக தாம் இந்தளவுக்கு அசத்துவதற்கு யுவராஜ் சிங், பிரைன் லாரா ஆகியோர் முக்கிய காரணம் என்று அபிஷேக் சர்மா பலமுறை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதுக்கு ஓகேன்னா.. நான் ஓகே.. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக கண்டிஷன் போட்டுள்ள – கவுதம் கம்பீர்

அத்துடன் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் ரெய்னா, யுவராஜ் போல பகுதி நேர பவுலராக முக்கிய விக்கெட்டுகளை எடுக்கும் திறமையைக் கொண்டுள்ளனர். அதனால் ஹர்பஜன் கூறுவது போல தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கும் சஹாலுக்கு பதிலாக அவரை இந்திய அணியில் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்கும். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமாகும்.

- Advertisement -