- Advertisement -
ஐ.பி.எல்

இதனால் தான் உங்க இந்திய கேரியர் இப்படியிருக்கு.. அங்கயும் காலை வாரிடாதீங்க.. சாம்சனை விளாசிய கவாஸ்கர்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபர் 2 போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. சென்னையில் மே 24ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 50, ராகுல் திரிபாதி 37 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், ட்ரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 139/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 10, கேட்மோர் 10, ரியான் பராக் 6, ஹெட்மயர் 4, போவல் 6 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியனர். அதனால் அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 56*, ஜெய்ஸ்வால் 42 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:
இந்த வெற்றியால் ஃபைனலில் கொல்கத்தாவை எதிர்கொள்ள தகுதி பெற்ற ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக சபாஷ் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார். மறுபுறம் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் மீண்டும் ஏமாற்றத்துடன் வெளியேறியது. முன்னதாக இந்த போட்டியில் ஜோஸ் பட்லர் இல்லாத பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் சாம்சன் 10 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாத சஞ்சு சாம்சன் கிளாமரான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது ராஜஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இப்படி அழுத்தமான சூழ்நிலையில் சொதப்புவதாலேயே இந்திய அணியிலும் அவர் இன்னும் பிரகாசிக்கவில்லை என்றும் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் இதே போல காலை வராமல் அவர் அசத்துவார் என்று நம்புவதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய அணி கோப்பையை வெல்ல விட்டால் இந்த வருடம் நீங்கள் 500 ரன்கள் அடித்து என்ன பயன்? ஒவ்வொரு முறையும் முக்கியமான நேரத்தில் அவர் கிளாமரான ஷாட்டை அடித்து அவுட்டாகிறார். ஏன் சாம்சன் இதுவரை இந்தியாவுக்காக சரியான கேரியரை கொண்டிருக்கவில்லை? ஏனெனில் அவருடைய தவறான ஷாட் செலக்சன் அவரை கீழே தள்ளுகிறது”

இதையும் படிங்க: யுவராஜ் வளர்ப்பு.. அவருக்கு பதிலா அபிஷேக்கை டி20 உ.கோ கூட்டிட்டு போங்க.. ரெய்னா, ஹர்பஜன் கோரிக்கை

“ஒருவேளை ஷாட் செலக்சன் நன்றாக இருந்திருந்தால் அவருடைய இந்திய கேரியர் நீண்டதாக இருந்திருக்கும். இந்த சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையிலாவது அவர் தன்னுடைய வாய்ப்பை 2 கைகளால் இறுக்கமாக பிடித்து அணியில் தனது இடத்தை உறுதியாக்குவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -