- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான், இலங்கையை முடிச்சு.. இந்தியாவின் போட்டியும் காலி பண்ணிட்டீங்க.. ஐசிசி’யை விளாசிய கவாஸ்கர்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஜூன் 15ஆம் தேதி ப்ளோரிடா நகரில் நடைபெற்ற அந்த போட்டியை மழையால் ஏற்பட்ட ஈரப்பதமான சூழ்நிலையால் ரத்து செய்த நடுவர்கள் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுத்தனர். ஆனால் இதையும் சேர்த்து ப்ளோரிடா நகரில் தொடர்ந்து 3வது போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முதலில் அங்கே நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள் அணிகள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை அந்தப் போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் இலங்கை அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிருக்காது. அதே போல நேற்று ப்ளோரிடா நகரில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டியும் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:
ஒருவேளை அந்தப் போட்டி நடைபெற்று அயர்லாந்து வெற்றியிருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்திருக்காது. இருப்பினும் யாராலும் தடுக்க முடியாத மழை காரணமாக தொடர்ந்து அங்கே 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கே மழையை சமாளிப்பதற்கான வசதிகள் போதுமானதாக இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட போட்டிகள் நடைபெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.

ஆம் புளோரிடா மைதானத்தில் பிட்ச் மற்றும் அதை சுற்றிய 30 யார்ட் சர்கிள் மட்டுமே மழையின் போது தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. மற்ற பகுதிகள் திறந்த வெளியாக இருந்ததால் மழை நீர் நின்றது. அதனால் இந்திய நேரப்படி 8 மணிக்கெல்லாம் மழை நின்றுவிட்ட போதிலும் தண்ணீரை அகற்றும் பணி 2 மணி நேரங்களாக நடைபெற்றது.

- Advertisement -

ஒருவேளை இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் போல ப்ளோரிடா மைதானமும் முழுமையாக மூடப்பட்டிருந்தால் மழை நின்றதும் அடுத்த 10 – 20 நிமிடத்திற்குள் போட்டி நடந்திருக்கும். இந்நிலையில் தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐசிசி சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது”

இதையும் படிங்க: தோனி தான் இந்தியாவின் மகத்தான வீரர்.. அவர் இல்லனா சச்சின் இதை செஞ்சுருக்க முடியாது.. கனடா வீரர் பேட்டி

“நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது” என்று கூறினார். அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது” என்று கூறினார்.

- Advertisement -