பிடிக்கிற மாதிரி டீமை செலக்ட் பண்ணனும்னு அவசியமில்ல.. தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

Sunil Gavaskar 5
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அந்தப் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர்களாக களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவரை ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று சௌரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஓப்பனிங்கில் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் தேவை என்பதால் ரோஹித்துடன் ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

கவாஸ்கர் லெவன்:
இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான தன்னுடைய இந்தியாவின் 11 பேர் கொண்ட அணியை முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற அணிகளை தேர்வு செய்வது எனக்கு பிடிக்காது. ஏனெனில் நீங்கள் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது”

“அது போன்று தேர்வு செய்யப்படும் அணியில் எப்போதும் சிலருக்கு பிடித்த வீரர்கள் இடம் பெற மாட்டார்கள். அந்த நிலையில் நீங்கள் கேட்பதற்காக என்னுடைய முயற்சியை போட்டு அயர்லாந்துக்கு எதிரான 11 வீரர்களை தேர்வு செய்துள்ளேன். ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யசஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமத் சிராஜ்” என்று கூறினார்.

- Advertisement -

அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி கேட்டதற்காக சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறவில்லை. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் ஒரே இடது கை வேகப்பந்து வீச்சாளராக தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமே இல்ல.. எங்களை வீட்டுக்கு அனுப்புற மாதிரி ஐசிசி பிளான் பண்ணிருக்காங்க.. ஹசரங்கா விமர்சனம்

இருப்பினும் அவரைக் கண்டு கொள்ளாத கவாஸ்கர் 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார். மேலும் ரோகித் சர்மாவுடன் விராட் கோலியை தன்னுடைய துவக்க வீரராக தேர்வு செய்துள்ள அவர் ஜெய்ஸ்வாலை 3வது இடத்தில் தேர்வு செய்துள்ளார். சொல்லப்போனால் பயிற்சி போட்டியில் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்கவில்லை. அதனால் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது குறிப்பிடப்படுகிறது.

Advertisement