ரோஹித் சர்மாவை சரமாரிய திட்டி தீர்த்த சுனில் கவாஸ்கர்..! ஏன் தெரியுமா..! காரணம் இதுதான்..?

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெட்ரா நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் படு தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையடுவார்கள் என்று எதிர்பார்க்கபட்ட இந்திய அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் கூட எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
sunil-gavaskar
இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ஹிட் மேன் என்றழைக்கப்படும் ரோஹித் ஷர்மா மெத்தனமாக விளையாடியதை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் குறை கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும். முதல் ஒரு நாள் போட்டியிலும் சதமடித்தார் ரோஹித் ஷர்மா.

ஆனால், நேற்று (ஜூலை 14) இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 26 பந்துகளை விளையாடி 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ரோஹித் ஷர்மாவின் இந்த மெத்தனமான ஆட்டத்தை குறை கூறியுள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் தெரிவிக்கையில்
rohit
“ரோஹித் ஷர்மா மிக மோசமான ஷாட் ஆடினார், அதிலும் முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த பிறகு இரண்டாம் போட்டியில் இப்படி ஆடியது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது அவரின் அதிக நம்பிக்கையின் காரணமாக ஆடியதாக கூட இருக்கலாம். மிகவும் சாமர்த்தியமாக ஆடக்கூடிய ஒரு வீரரிடம் இருந்து இப்படி ஒரு ஆட்டம் என்றால், அது அதிர்ச்சி அளிக்கிறது”. இந்திய அணி இந்த போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து தோனியை கூட பலரும் சாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.