இதெல்லாம் வீக்னஸ் இல்ல.. இவ்ளோ சதங்கள் அடிச்ச அவருக்கு நாம சொல்ல வேண்டியதில்ல.. கவாஸ்கர் ஆதரவு

Sunil Gavaskar 8
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சூரியகுமார் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றி கண்டது. ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் சூப்பர் 8 சுற்றையும் இந்தியா வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
முன்னதாக உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கை நாயகர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அரை சதமடித்ததை தவிர்த்து மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார். அந்த வரிசையில் இப்போட்டியில் 8 (13) ரன்களில் பரூக்கியின் அவுட் சைட் ஆஃப் பந்தில் அவுட்டான அவர் ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதன் காரணமாக இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டாகும் ரோகித் சர்மாவின் பலவீனம் இப்போட்டியில் வெளிப்பட்டது. ஆனால் அதெல்லாம் பலவீனம் இல்லை என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் இந்திய கேப்டனுக்கு கொடுத்துள்ள ஆதரவு பின்வருமாறு. “ரோஹித் அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன். எனவே என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும்”

- Advertisement -

“பவுலரின் கோணத்துக்காக உங்கள் ஆட்டத்தை மாற்றுங்கள் என்று நீங்கள் ரோஹித் சர்மாவிடம் சொல்ல முடியாது. சில நேரங்களில் கோணத்தின் காரணமாக நீங்கள் ஆன் சைடில் அடிக்க முடியாது. இங்கே உட்கார்ந்து கொண்டு நீங்கள் அங்கே என்ன செய்யலாம் என்பது பற்றி நினைக்க முடியும். இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இவ்வளவு சதங்கள் அடித்துள்ள மனிதருக்கு நீங்கள் எதையும் சொல்ல வேண்டியதில்லை”

இதையும் படிங்க: அவர் எங்களோட திட்டத்தை உடைச்சு ஆப்கானிஸ்தானை தோற்கடிச்சுட்டாரு.. ஜோனதன் ட்ராட் வருத்தம்

“ஆம் அவர் அவுட்டானார். இருப்பினும் ஒரு போட்டியில் ஏதோ ஒரு வகையில் பேட்ஸ்மேன் அவுட்டாக வேண்டும். எனவே நீங்கள் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தால் அதை வீக்னஸ் என்று சொல்ல முடியாது. குறிப்பாக நீங்கள் 10 – 15000 ரன்கள் அடித்தால் 40 முறை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசையில் அவுட்டாவது வழக்கம். அதற்காக அது வீக்னஸ் என்றாகி விடாது” எனக் கூறினார்.

Advertisement