ஜஸ்ட் மிஸ் ஆகிருக்கும்.. 41 வருசத்துக்கு முன் கபில் தேவ் செஞ்சதை.. சூரியகுமார் செஞ்சுருக்காரு.. ரோஜர் பின்னி பாராட்டு

Stuart Binny
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் நிறுத்தியுள்ளது. முன்னதாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற ஃபைனலில் இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

34/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணியை அதிகபட்சமாக விராட் கோலி 76, அப்சர் பட்டேல் 47, சிவம் துபே 27 ரன்கள் அடித்து காப்பாற்றினர். அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 39, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 31, க்ளாஸென் 52 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றியை பறித்தனர். போதாக்குறைக்கு கடைசி நேரத்தில் டேவிட் மில்லர் 21 ரன்கள் அடித்து சவாலை கொடுத்தார்.

- Advertisement -

கபில் தேவ் போல:
அதனால் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 12 மட்டுமே தேவைப்பட்டது. அப்போது முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்சர் அடித்தார். ஆனால் அதை லாங்க் ஆஃப் திசையிலிருந்து ஓடி வந்த சூரியகுமார் யாதவ் சிக்சரை தடுத்து கேட்ச் பிடித்தார். அப்போது பேலன்ஸை இழந்த அவர் களத்திற்குள் பந்தை தூக்கிப்போட்டு விட்டு பவுண்டரிக்குள் சென்று மீண்டும் வந்து கேட்ச் பிடித்தார்.

கடைசியில் அதுவே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. அதனால் சூரியகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக் கோப்பை என்று பலரும் பாராட்டினர். இந்நிலையில் 1983 உலகக்கோப்பை ஃபைனலில் விவ் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்ச்சை நீண்ட தூரம் ஓடி சென்று பிடித்த கபில் தேவ் போல சூரியகுமார் அசத்தியதாக பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஒருவேளை அதை விட்டிருந்தால் இந்தியா தோற்றிருக்கும் என்றும் பின்னி தெரிவித்துள்ளார். 1983 உலகக்கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கபில் தேவ் கேட்ச் அற்புதமானது. அவர் பந்தின் மீது தன்னை கண்ணை வைத்துக்கொண்டே நீண்ட தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். அதே போல இது ஒரு தடகள வீரரை போன்ற அற்புதமான செயல்பாடாகும்”

இதையும் படிங்க: 2024 மட்டுமல்ல அடுத்ததா 2026-லையும் நம்ம தான் டி20 வேர்ல்டு சாம்பியன் ஆகப்போறோம் – ஏன் தெரியுமா?

“சூரியகுமார் எல்லை கயிற்றின் மேலே சென்று அந்த நிலைமையை டீல் செய்தார். ஒருவேளை அதை விட்டிருந்தால் நாம் தோல்வியை சந்தித்திருப்போம். அது கபில் தேவ் கேட்ச் போன்றது. அந்த 2 கேட்ச்களும் மகத்தானது” என்று கூறினார். அப்படி அபாரமான கேட்ச் பிடித்ததால் ஃபைனல் போட்டியில் இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் விருதையும் சூரியகுமார் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement