முடியல போதும்யா இதை நிறுத்து.. சூரியகுமாரிடம் நேரடியாக பேசிய ரசித் கான்.. விளக்கிய ரவி சாஸ்திரி

Rashid Khan Suryakumar
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 32, சூரியகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்து ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் சூப்பர் 8 சுற்றையும் இந்தியா வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

- Advertisement -

போதும்யா முடியல:
முன்னதாக இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான் இந்தியாவின் விராட் கோலி, ரிஷப் பண்ட், சிவம் துபே ஆகிய 3 வீரர்களின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலை கொடுத்தார். அதனால் 62/3 என இந்தியா தடுமாறிய போது 4வது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (28) ரன்கள் விளாசிய அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கானுக்கு எதிராக 9, 11வது ஓவரில் முட்டி போட்டு ஸ்வீப் ஷாட் வாயிலாக சூரியகுமார் 1 சிக்ஸரையும் 2 பவுண்டரியும் பறக்க விட்டார். அதைப் பார்த்த ரசித் கான் இவ்வளவு கடினமாக வீசியும் அசால்ட்டாக அடித்தால் செய்வது என்ற வகையில் ஏமாற்றமான ரியாக்சன் கொடுத்தார். அதோடு நிற்காத அவர் 11வது ஓவரின் முடிவில் சூரியகுமாரிடம் சென்று பேசினார்.

- Advertisement -

அப்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதை நேரலையில் வர்ணித்த ரவி சாஸ்திரி விளக்கியது பின்வருமாறு. “எனக்கு எதிராக ஸ்வீப் அடிப்பதை நிறுத்துங்கள் என்று ரசித் சொல்கிறார். அதற்கு இது என்னுடைய தவறு இல்லை என்று சூரியகுமார் சொல்கிறார்” என தெரிவித்தார். அந்த வீடியோவை ஐசிசி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் அதிர்ஷ்டம்.. கலை தெரிஞ்ச பும்ரா இல்லையேன்னு.. எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.. ஃகைப்

அந்த வகையில் அசத்தலாக விளையாடிய சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் ரசித் கானுக்கு எதிராக ஒரு முறை கூட அவுட்டாகாமல் 100+ ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. அப்போட்டி ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement