நான் ரெடி ஆகி வந்தாலும் இவங்க என்னை ஐ.பி.எல் தொடரில் விளையாட விடமாட்டாங்க – ஓபனாக பேசிய ஸ்டோக்ஸ்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது, தொடரில் பங்கேற்றிருந்த பல வீரர்களுக்கு கொரனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் எஞ்சியிருக்கும் 31 போட்டிகளை செப்டம்பர் மாதம் இறுதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற மாட்டார்கள் என்று அறிவித்தார், அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாக இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ். இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து காரணமாக விலகிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இன்னும் 9 வாரங்களில் நான் குணமடைந்து விடுவார் என்று தெரிகிறது.

stokes

ஆனால் மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கியதால் என்னால் விளையாட முடியாது என்று ஒரு பதிவின் மூலமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவிட்ட அவர், ஐபிஎல் தொடரின்போது கைவிரல் காயம் காரணமாக, தொடரை விட்டு விலகியபோது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. தற்போது கைவிரல் காயம் சிறிது சிறிதாக குணமடைந்து வருகிறது. நான் முழுவதுமாக குணமடைய இன்னும் 9 வாரங்கள் ஆகும். ஆனால் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் என்னால் விளையாட முடியுமா என்று தெரியவில்லை.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமானது எங்களை சர்வதேச போட்டிகளில் விளையாட வைப்பதற்கே விரும்புகிறது. எனவே அதை மீறி என்னால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இயலாது என்று கூறியுள்ளார்.

Stokes 1

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்க்கு, பஞ்சாப் அணியுடனான போட்டியின்போது விரலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை பெரிதாக இருந்ததால், அதைத் தொடர்ந்து அவர் தொடரிலிருந்தே வெளியேறி இங்கிலாந்திற்கு சென்றுவிட்டார்.

- Advertisement -

Stokes-2

அதற்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதால், மீண்டும் நடக்கப்போகும் தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருந்த பென் ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் தற்போதைய முடிவு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.

Advertisement