நாட்டுக்காக முழு அர்ப்பணிப்போடு கடைசி வரை விளையாடியவர் இவர் – இந்திய லெஜண்டை பாராட்டிய ஸ்டீவ் வாக்

Steve-Waugh
- Advertisement -

இந்திய அணியின் மறக்க முடியாத பவுலர்களில் அனில் கும்ப்ளேவும் ஒருவர். அனில் கும்ப்ளே இந்திய அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் ஆவார். இவர் 18 வருடங்களாக தனது தாய் நாட்டு கிரிக்கெட் அணிக்காக வாளையாடி உள்ளார். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய பார்மட்களில் விளையாடி முறியடிக்க முடியாத பல சாதனையை படைத்துள்ளார். இந்திய வீரர்களின் சார்பாக இவர் 619 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

Kumble

இதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த மூன்றாவது வீரராக திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29.65 பவுலிங் சராசரியை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் 35 முறை 5 விக்கெட்களும் 8 முறை 10 விக்கெட்களும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 1999ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிபோது இவர் 10 விக்கெட்களையும் வீழ்த்தி 74 ரன்கள் விட்டு கொடுத்து மறக்க முடியாத சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

10விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். தற்போது வரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் ஒருநாள் தொடரில் 337 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். இவர் ஒரு பவுலராக மட்டுமின்றி ஒரு கேப்டனாகவும் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இவர் தனது நாட்டுக்காக விளையாடுவதை விரும்பி விளையாடுபவர்.

kumble 1

இவரது பந்து வீச்சால் இந்திய அணி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அனில் கும்ப்ளேவுடன் இணைந்து விளையாடிய ஸ்டீவ் வாக் கும்ப்ளே குறித்து பேசியிருக்கிறார். ஸ்டீவ் வாக் கூறுகையில் : “கும்ப்ளே போன்று ஒரு வீரரை நான் பார்த்ததே கிடையாது. இவர் தனது நாட்டுக்காக விரும்பியும் ரசித்து விளையாடும் வீரராக இருக்கிறார். இந்திய அணிக்காக விளையாடுவதே அவரது முழு மூச்சாக இருக்கிறது.

Kumble

இவரை நாங்கள் ஒரு லெக் ஸ்பினராக பார்க்கவில்லை. அவரை இன்ஸ்விங் பந்துவீச்சாளராக தான் பார்த்தோம். எங்களுக்கு தெரிந்து அனில் கும்ப்ளை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை. இவர் சீரான கோட்டில் வெவ்வேறு வேகத்தில் சிறப்பாக பந்து வீசுவதில் வல்லவர். இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் ராகுல் ட்ராவிட் தான் அனில் கும்ப்ளே” என்று ஸ்டீவ் வாக் புகழந்துள்ளார்.

Advertisement