இந்திய பந்துவீச்சாளரான இவரை தவிர வேறுயாரும் எனக்கு இவ்வளவு தொல்லை கொடுத்ததில்லை – ஸ்மித் பேட்டி

Smith
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் தற்போதைய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஸ்மித் குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு சதம் விளாசி அவர் இந்திய அணிக்கு பெரும் தொந்தரவு கொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவர் ஒருநாள் போட்டிகளிலேயே அபாரமான ஃபார்மில் இருந்ததால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை கொடுப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

Smith

எனவே இந்த தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தம் நான்கு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். பொதுவாக எந்த நாட்டில் இருந்தாலும் உள்நாடு மற்றும் அயல் நாடு என எதையும் பார்க்காமல் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்துவீச்சு என அனைத்தையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளக்கூடிய திறன் கொண்டவர்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவரது ஆட்டம் அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். அன்மையில் ஐசிசி தேர்வு செய்த கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட்டின் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இவரே தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறும் வகையில் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி வரும் ஸ்மித் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டு முறை அவர் அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

smith

இந்நிலையில் தான் தனது ஒட்டுமொத்த கேரியரில் அஸ்வினை போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளரை பார்த்ததில்லை எனவும் அவரை தவிர வேறு எந்த சுழற்பந்து வீச்சாளரும் இப்படி செய்ததில்லை எனவும் ஸ்மித் மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனது ஆட்டத்தின் மூலம் அஸ்வினுக்கு நான் அழுத்தத்தை கொடுக்க விரும்பினேன். ஆனால் நடந்தது வேறு. எனது கரியரில் அஸ்வினை தவிர வேறு எந்த பந்து வீச்சாளரும் என்னை இப்படி செய்ததில்லை.

வழக்கமாக நான் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுவேன். ஆனால் அஸ்வின் பந்து வீசும்போது என்னால் அதை செய்ய முடியவில்லை. இரண்டு முனைகளிலும் இருந்து கத்தி வருவது போல அவர் பந்துவீசி எனது விக்கெட்டை வீழ்த்தி விடுகிறார். இருப்பினும் என்னால் அவரை சமாளித்து அவரது பந்து வீச்சுக்கு எதிராக நிலைத்து நின்று விளையாட முடியும் என தான் நம்புவதாகவும் ஸ்மித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement