இதெல்லாம் நியாயமே இல்ல.. எங்களை வீட்டுக்கு அனுப்புற மாதிரி ஐசிசி பிளான் பண்ணிருக்காங்க.. ஹசரங்கா விமர்சனம்

Wanindu Hasaranga
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆனால் நியூயார்க் நகரில் ஜூன் மூன்றாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இலங்கை ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை வெறும் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இலங்கை 2 மோசமான சாதனை படைத்தது. அதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

- Advertisement -

அலையும் இலங்கை:
இந்நிலையில் இந்தத் தொடரில் தங்களுடைய லீக் சுற்று போட்டிகளை ஐசிசி வடிவமைத்த விதம் நியாயமற்றதாக இருப்பதாக இலங்கை வீரர் மஹீஸ் தீக்சனா விமர்சித்துள்ளார். அதாவது தென்னாபிரிக்காவுக்கு எதிராக நியூயார்க் நகரில் விளையாடிய இலங்கை அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக டாலஸ் நகரில் விளையாட உள்ளது. அங்கிருந்து நேபாலுக்கு எதிராக லாடர்ஹில் நகரில் விளையாடும் இலங்கை கடைசியாக நெதர்லாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸின் செயின்ட் லூசியா நகரில் விளையாட உள்ளது.

அப்படி 4 வெவ்வேறு மைதானங்களில் 4 போட்டிகள் நடைபெறுவதால் அங்குள்ள சூழ்நிலைகளை தங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று தீக்சனா தெரிவித்துள்ளார். அதனால் தோல்வியை சந்தித்து வந்த வாக்கிலேயே வீட்டுக்கு கிளம்ப வாய்ப்புள்ளதாகவும் அவர் மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளது பின்வருமாறு. “4 போட்டிகளை நாங்கள் 4 வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது நியாயமற்றது. நாங்கள் ஃப்ளோரிடா மற்றும் மியாமி நகரிலிருந்து விமானத்தை பிடிக்க 8 மணி நேரம் காத்திருந்தோம்”

- Advertisement -

“இங்கிருந்து நாங்கள் இரவு 8 மணிக்கு செல்ல வேண்டும். ஆனால் விமானம் காலை 6:00 மணிக்கே உள்ளது. இது எங்களுக்கு நியாயமற்றது. ஏனெனில் அதன் காரணமாக அங்குள்ள சூழ்நிலைகளுக்கு எங்களால் உட்பட முடியவில்லை. ஹோட்டலிலிருந்து மைதானத்திற்கு வர 1.40 மணி நேரம் தேவைப்படுகிறது. அதற்கு நாங்கள் காலை 5:00 மணிக்கு எழுந்து வர வேண்டியுள்ளது. இருப்பினும் களத்தில் விளையாடும் போது அது முக்கியமல்ல” என்று கூறினார்.

இதையும் படிங்க: எதிரணி 200 ரன்ஸ் அடிச்சாலும் பரவாயில்ல.. எங்களிடம் அந்த திறமை இருக்கு – ரஷீத் கான் அதிரடி கருத்து

இது பற்றி இலங்கை கேப்டன் ஹசரங்கா விமர்சித்தது பின்வருமாறு. “கடந்த சில நாட்களாக நாங்கள் கடினமான நேரத்தை சந்தித்தோம் என்பதை சொல்ல முடியாது. 4 போட்டிகள் 4 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறுவது கடினம். அதனால் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்த போட்டி நடைபெறும் டாலாஸ் மைதானத்தின் சூழ்நிலை எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.

Advertisement