77க்கு ஆல் அவுட்.. டி20யில் டெஸ்ட் விளையாடிய இலங்கை 2 மோசமான சாதனை.. ஆன்றிச் நோர்ட்ஜே வரலாற்று சாதனை

SL vs RSA
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் மூன்றாம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு நியூயார்க் நகரில் நான்காவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். போதாகுறைக்கு பேட்டிங்க்கு சவாலாக இருந்த பிட்ச்சில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக பந்து வீசியது. அதனால் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய நிசாங்கா 3 (8) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

சுருண்ட இலங்கை:
அடுத்ததாக வந்த கமிண்டு மெண்டிஸ் 11 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது தைரியமாக முன்கூட்டியே களமிறங்கிய இலங்கை கேப்டன் ஹசரங்காவை டக் அவுட்டாக்கிய கேசவ் மகாராஜ் அடுத்ததாக வந்த சமரவிக்கிரமாவை கோல்டன் டக் அவுட்டாக்கினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் 30 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த குசால் மெண்டிஸ் 19 ரன்னில் 63.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார் அன்றிச் நோர்ட்ஜெ வேகத்தில் அவுட்டானார்.

அதனால் 40/5 என தடுமாறிய இலங்கைக்கு அசலங்கா 6, சனாக்கா 9, ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2010 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஜ்டவுன் நகரில் இலங்கை 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இலங்கை மற்றுமொரு மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் 2016இல் இந்தியாவுக்கு எதிராக 82க்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனையாகும். அத்துடன் இந்த போட்டியில் ஒரு இலங்கை பேட்ஸ்மேன் கூட 100 ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டாமல் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினர். அந்தளவுக்கு அபாரமாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 4, ரபாடா 2, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: தென்னாபிரிக்காவை ஃபினிஷ் செய்த கோலி.. குரு – சிஷ்யனுக்கு இலக்கணமாக நின்ற தோனி.. டி20 உ.கோ ரீவைண்ட்

குறிப்பாக 4 ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த நோர்ட்ஜே டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பவுலிங்கை (4/7) பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற தனது சொந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக 2022 டி20 உலகக் கோப்பையில் அவர் 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement