இப்படி கூடவா தோப்பீங்க ? சன் ரைசர்ஸ் அணி பெற்ற தோல்விக்கு – ரசிகர்கள் விமர்சனம்

SRH
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று இரவு சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சன் ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது.

pbks vs srh

- Advertisement -

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்ரம் 27 ரன்களும், ராகுல் 21 ரன்களும் எடுத்தனர். பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹைதராபாத் வீரர்கள் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி தடுமாறியது. அடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹா 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 120 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

pbks

இதன் காரணமாக பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது. ஹோல்டர் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் ஹைதராபாத் அணி பெற்ற இந்தத் தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இவர்கள் இந்த ரன்களைக் கூட அடிக்க முடியாமல் போனது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement