என்னப்பா இது பெங்களூரு அணிக்கு வந்த சோதனை. டார்கெட் எவ்வளவு தெரியுமா ?

Warner
- Advertisement -

இன்று மதியம் 4 மணிக்கு துவங்கிய 11 ஆவது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார்.

Srh

- Advertisement -

அதன்படி முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 56 பந்துகளில் 114 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும்.

மேலும், தொடர்ந்து ஆடிய வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் முடிவில் சன் ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை 231 எட்டியது. இதனால் பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பெங்களூரு அணி வீரர்கள் களமிறங்க தயாராகி வருகின்றனர்.

Bairstow

இவ்வளவு பெரிய இலக்கினை சேசிங் செய்து வெல்ல நிச்சயம் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆள் மட்டுமே முடியும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற பெங்களூரு அணிக்கு இந்த போட்டியிலும் தோல்வி நிச்சயம் என்றே கூறலாம்.

Advertisement