- Advertisement -
ஐ.பி.எல்

113க்கு ஆல் அவுட்.. ஃபைனலில் மிரட்டிய கொல்கத்தா.. சிஎஸ்கே’வின் 11 வருட மோசமான சாதனையை தனதாக்கிய ஹைதராபாத்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்த ஓவரிலேயே வைபவ் அரோரா வேகத்தில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதியும் 9 (13) ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் நடையை கட்டினார்.

- Advertisement -

மிரட்டிய கொல்கத்தா:
அதனால் 21/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு அடுத்ததாக வந்த ஐடன் மார்க்கம் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் நிதிஷ் ரெட்டி 13 (10) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் திணறலாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் 20 (23) ரன்களில் ரசல் வேகத்தில் அவுட்டானார். அதனால் 62/5 என தடுமாறிய ஹைதராபாத் 100 ரன்கள் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

ஏனெனில் அடுத்ததாக வந்த சபாஷ் அகமது 8, அப்துல் சமத் 4 ரன்களில் அவுட்டாகி சென்றனர். இறுதியில் கேப்டன் பட் கமின்ஸ் 24 (19) ரன்கள் எடுத்தும் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதெராபாத் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆல் அவுட்டான முதல் அணி மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற 2 படுமோசமான சாதனைகளை ஹைதராபாத் படைத்தது.

- Advertisement -

இதற்கு முன் 2013 ஃபைனலில் மும்பைக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125/9 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும் அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3, மிட்சேல் ஸ்டார்க் 2, ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பிட்ச் பிரத்தியேகமாக செம்மண்ணால் உருவாக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஹைதராபாத் 21/3.. அதீத தைரியத்தால் நழுவவிட்டாரா கமின்ஸ்? ஹெட் மோசமான சாதனை.. தெறிக்க விட்ட ஸ்டார்க்

அதனால் வருண் சக்கரவர்த்தி – சுனில் நரேன் ஆகிய கொல்கத்தாவின் தரமான ஸ்பின்னர்கள் மிரட்டுவார்கள் என்று மேத்தியூ ஹைடன் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 114 என்ற இலக்கை கொல்கத்தா துரத்தி வருகிறது.

- Advertisement -