- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இது மட்டும் நடந்தா ரோஹித் பார்படாஸ் கடலில் குதிச்சுருவாரு.. உ.கோ விட ஐபிஎல் கஷ்டம்.. கங்குலி கருத்து

வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளுமே இதுவரை இத்தொடரில் தோல்வியை சந்திக்காமல் ஃபைனல் வந்துள்ளது.

எனவே இந்தப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை முத்தமிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற போது உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவருடைய தலைமையில் இதுவரை இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை.

- Advertisement -

கங்குலி வித்யாச கருத்து:
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா அவருடைய தலைமையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்நிலையில் 7 மாதத்திற்குள் இந்த உலகக் கோப்பை ஃபைனலிலும் இந்தியா தோல்வியை சந்தித்தால் ரோஹித் சர்மா அப்படியே பார்படாஸ் கடலில் குதித்து விடுவார் என்று சௌரவ் கங்குலி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும் உலகக்கோப்பை வெல்வதை விட ஐபிஎல் வெல்வது கடினம் என்றும் கங்குலி கூறியுள்ளார். இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல வாழ்த்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “7 மாதத்திற்குள் ரோகித் சர்மா 2 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்திப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை 7 மதத்திற்குள் 2 ஃபைனலில் தோல்வியை சந்தித்தால் ரோஹித் பார்படாஸ் கடலில் குதித்து விடுவார்”

- Advertisement -

“அற்புதமாக பேட்டிங் செய்து இந்தியாவை அபாரமாக வழி நடத்தும் அவர் ஃபைனலில் அதைத் தொடர்வார் என்று நம்புகிறேன். ஃபைனலில் இந்தியா வெற்றியின் பக்கம் இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு அவர்கள் சுதந்திரமாக விளையாடி இந்தத் தொடரின் சிறந்த அணியை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெறயிருந்த பயிற்சியை ரத்து செய்த இந்திய அணி – எதற்காக தெரியுமா?

“ஏனெனில் பெரிய தொடரை வெல்வதற்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் வேண்டும். ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதுவே பெரிய சாதனை. ஐபிஎல் வெல்வது கடினம். அதற்காக சர்வதேச கிரிக்கெட்டை விட ஐபிஎல் சிறந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஐபிஎல் வெல்ல 16 – 17 போட்டிகள் வேண்டும். உலகக் கோப்பை வெல்ல உங்களுக்கு 8 – 9 கோட்டிகள் போதும். இருப்பினும் உலகக் கோப்பை வெல்வதே மிகப்பெரிய கௌரவம். அதை ரோஹித் செய்வார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -