நான் தான் சம்மதிக்க வெச்சேன்.. மும்பை கழற்றி விட்ட ரோஹித் என்ன செஞ்சுருக்காருன்னு பாருங்க.. கங்குலி வாழ்த்து

Sourav Ganguly
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற்று 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஐசிசி தொடர்களில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை இந்திய அணியில் ரோகித் சர்மா கொண்டு வந்துள்ளார். அதை பின்பற்றி 2023 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் எதிரணிகளை அடித்து நொறுக்கி இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றது. இந்நிலையில் விராட் கோலி பதவி விலகியதும் ரோகித் சர்மாவை தாம் தான் இந்தியாவின் கேப்டனாக செயல்பட சம்மதிக்க வைத்ததாக முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பின்னணியில் கங்குலி:
அத்துடன் ஐபிஎல் தொடரில் மும்பை கழற்றி விட்ட ரோகித் சர்மா இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்துவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கை வட்டமாக வந்துள்ளது. 6 மாதத்திற்கு முன்பாக மும்பை அணியின் கேப்டனாக இல்லாத அவர் தற்போது இந்திய அணியை தோல்வியே சந்திக்காமல் உலகக் கோப்பை ஃபைனலுக்கு அழைத்து வந்துள்ளார்”

“இதுவரை விளையாடிய 2 உலகக் கோப்பையில் அவர் தோல்வியை சந்திக்காமல் இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதுவே அவருடைய தலைமையின் தரத்தை காட்டுகிறது. அதற்காக நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக இருக்க விரும்பாத போது நான் பிசிசிஐ தலைவராக இருந்தேன். அப்போது அவரை கேப்டனாக நியமிக்க நிறைய நேரம் தேவைப்பட்டது”

- Advertisement -

“ஏனெனில் அவர் அதற்கு தயாராக இல்லை. அதனால் நாங்கள் அவரை கேப்டனாக்க நிறைய தள்ள வேண்டியிருந்தது. தற்போது அவருடைய தலைமையில் இந்திய அணி முன்னேறுவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் உலகக்கோப்பை வெல்ல உங்களுக்கு 8 – 9 போட்டிகள் போதும். ஆனால் ஐபிஎல் வெல்ல 16 – 17 போட்டிகள் வேண்டும். இருப்பினும் உலகக் கோப்பை வெல்வதில் அதிக கௌரவம் உள்ளது”

இதையும் படிங்க: அது நடந்துருந்தா இப்போ பாத்துருக்க முடியாது.. கோலி, ரோஹித்தை பாக்குறது இதுவே கடைசி.. சேவாக் கருத்து

“அதை ரோகித் இம்முறை செய்வார் என்று நம்புகிறேன். 7 மாதத்திற்குள் அவர் 2 ஃபைனலில் தோல்வியை சந்தித்தால் பார்பர்டஸ் கடலில் குதித்து விடுவார். இருப்பினும் அணியை அற்புதமாக வழி நடத்தும் அவர் நாளைய ஃபைனலில் நன்றாக அசத்துவார் என்று நம்புகிறேன். வெற்றிக்கு இந்தியா சுதந்திரத்துடன் விளையாட வேண்டும். ஐசிசி தொடர்களை வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். அது இந்தியாவுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

Advertisement