ஐபிஎல் வேற இந்தியா வேற.. கம்பீர் பயிற்சியாளரா வரது பெருசில்ல.. அவங்களிடம் திணிக்காதிங்க.. கங்குலி கருத்து

Sourav Ganguly 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவதற்காக அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றது. தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவி காலம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. எனவே அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்ற பிசிசிஐ சில வெளிநாட்டு முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்த நேரத்தில் கௌதம் கம்பீர் ஆலோசகராக வந்ததும் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அத்துடன் 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த கம்பீர் இந்தியா சாம்பியன் பட்டங்களை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். எனவே அவரை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது.

- Advertisement -

கங்குலி கருத்து:
சொல்லப்போனால் சென்னையில் 2024 ஐபிஎல் ஃபைனல் முடிந்ததும் அவரிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியானதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் அணிக்கும் இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருப்பது ஒன்றல்ல என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்தப் பதவிக்கு கம்பீர் சரியானவர் என்று கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் பயிற்சியாளரான பின் உங்களுடைய கருத்துக்களை திணிக்காமல் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுடன் இணைந்து செயல்படுமாறும் அவர் கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மிகவும் நேர்மையாக ஆர்வமாக இருக்கக்கூடிய அவர் அந்த பதவிக்கு சரியான நபர். ஐபிஎல் போன்ற அணிக்கும் சர்வதேச அணிக்கும் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக இருப்பதில் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற உயர்தரமான அணிக்கு பயிற்சியாளராக இருப்பது வித்தியாசமானது. ஆனால் கம்பீர் அதை அறிவார் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: ரெய்னா அதிரடியில் தெ.ஆ அணியை வீழ்த்திய இந்தியா.. துருவ நட்சத்திரமாக இன்றும் பேசும் சாதனை.. டி20 உ.கோ ரீவைண்ட்

“ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்களை எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவரால் நட்சத்திரங்கள் அடங்கிய இந்திய உடை மாற்றும் அறைக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள முடியும். அந்த வேலை உங்களுடைய சொந்த எண்ணங்களை தள்ளுவதை பொறுத்தது மட்டுமல்ல. எனவே இந்திய அணியை தன்னுடன் இணைத்து அவர் எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். முன்னதாக இந்தியாவின் பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று கங்குலி ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement