இலங்கை அரசு காட்டிய பச்சைக்கொடி : இந்தியா இலங்கை தொடர் குறித்து வெளியான – நற்செய்தி

sl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி துவங்க இருந்தது. ஆனால் அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய இலங்கை அணியில் 3 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இலங்கை அணி வீரர்கள் ஒரு வார காலத்திற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் தனிமைப்படுத்தப் பட்டனர்.

indvssl

- Advertisement -

இதன் காரணமாக ஜூலை 18ஆம் தேதி இந்த தொடர் துவங்கும் என்று போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் மற்றும் நிர்வாகி நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த மாற்றங்கள் நடைபெற்றது.

இதன் காரணமாக தற்போது இலங்கை அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்ததன் காரணமாக தற்போது இந்தியா இங்கிலாந்து தொடர் நடைபெறுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

SL

அதேபோன்று இந்திய அணி வீரர்களும் பயோ பாளையத்தில் சரியான முறையில் பாதுகாப்பாக இருப்பதால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஜூலை 18 ஆம் தேதி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் விளையாடலாம் என இலங்கை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

dravid

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தஷன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளது. பலமிழந்த இலங்கை அணியை இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி நிச்சயம் எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement