எங்களுக்காக நீங்க இதை பண்ணியாகனும். எங்கள காப்பாத்துங்க ப்ளீஸ் – பி.சி.சி.ஐ யிடம் கெஞ்சிய இலங்கை நிர்வாகம்

Sl
- Advertisement -

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக 2020ஆம் ஆண்டு பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் நடக்காமலே ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

ind vs sl

- Advertisement -

இந்த தொடருக்காக இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்று 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி முழுக்க முழுக்க புது அணியாக இந்த தொடரில் விளையாட உள்ளதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளது.

அதற்கு பி.சி.சி.ஐ யும் சம்மதம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு இலங்கையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏகப்பட்ட நிதி சிக்கலில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிக்கித்தவிக்கிறது. அதனால் இலங்கை வரவுள்ள இந்திய அணி கூடுதலாக போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ யிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

SL

அப்படி கூடுதலாக விளையாடும் போட்டியின் மூலம் கிடைக்கும் டெலிவிஷன் உரிமை வருமானத்தை நாங்கள் பெற முடியும் என்று இலங்கை வாரியம் கேட்டுகொண்டதால் பி.சி.சி.ஐ யும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது கூடுதலாக இரண்டு போட்டிகள் போட்டிகளில் இந்திய அணி விளையாடும் என பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.

sl

அதேபோன்று இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி ஆகஸ்ட் மாதம், ஸ்காட்லாந்து அணி செப்டம்பர் மாதமும், ஆப்கானிஸ்தான் அணி நவம்பர் மாதம் இலங்கை சென்று விளையாடுகிறது அந்த தொடரிலும் கூடுதல் போட்டியில் விளையாட அவர்களை கேட்டுக் கொள்வோம் என இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement