நீங்க ஒரு பவர் ஹிட்டர்.. இந்த ஒரு அட்வைஸ் தான் உங்களுக்கு.. ரிஷப் பண்டிற்கு அறிவுரை கூறிய பயிற்சியாளர்

Pant
- Advertisement -

நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இன்று விளையாட இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்குகிறது.

- Advertisement -

இப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் : இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று எச்சரிக்கும் வகையில் பேசி உள்ளார். இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த போட்டி குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சூரியகுமார் யாதவின் சிறு வயது பயிற்சியாளரான அஸ்வால்கர் இந்திய அணிக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மெதுவாக துவங்குகிறார்கள்.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் சற்று வேகத்தை அதிகரித்தால் அதைவிட சிறந்தது கிடையாது. அதேபோன்று கடந்த 5 போட்டிகளில் எவ்வாறு விளையாடினோமோ அதே போன்ற ஆட்டத்தை விளையாட வேண்டும். எந்த ஒரு புதிய விடயத்தையும் முயற்சி செய்ய வேண்டாம். ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அவர் ஒரு பவர் ஹிட்டர். எனவே நான் அவருக்கு கொடுக்கும் ஒரே ஒரு அறிவுரை யாதெனில் :

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டுக்கு இதெல்லாம் வேலையாகாது.. விராட் கோலிக்கு மட்டுமே அந்த தகுதியிருக்கு.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி

ரிவர்ஸ் ஷாட்டை எல்லாம் விளையாடாதீர்கள். களத்தில் நின்று உங்களது பவர் ஹிட்டிங்கை வெளிப்படுத்தினாலே ரன்களை குவிக்க முடியும். சூரியகுமார் யாதவை பொறுத்தவரை அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும் என பல அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement