இவங்கள நம்பி ஒரு புரயோஜனமும் இல்ல.. அதிரடி முடிவை கையிலெடுத்து அறிவிப்பை வெளியிட்ட – இலங்கை பயிற்சியாளர்

Silverwood
- Advertisement -

வனிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு வெளியேறியது அனைவரது மத்தியிலும் அதிகளவு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஆசிய அணிகளில் முக்கிய அணியாக பார்க்கப்படும் இலங்கை அணி எந்த ஒரு தொடரிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பையிலும் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மொத்தமாக மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய அந்த அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்வி என மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

- Advertisement -

இப்படி டி20 உலக கோப்பையில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடு காரணமாக அதிருப்தி அடைந்த அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் சில்வர்வுட் தோல்வியின் எதிரொலியாக நேற்று தனது பயிற்சியாளர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவரது தலைமையின் கீழ் தொடர்ந்து சுமாராக செயல்பட்டு வந்த இலங்கை அணி ஒருமுறை ஆசிய கோப்பையை கைப்பற்றியதே தவிர மற்றபடி பெரிய அளவில் சோபிக்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக ஏமாற்றத்தை சந்தித்த சில்வர்வுட் இந்த டி20 உலக கோப்பை தொடரை பெரியதாக நம்பி இருந்தார். ஆனால் இந்த தொடரிலும் வளர்ந்து வரும் அணிகளை காட்டிலும் இலங்கை அணி படுமோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தியது. அதனால் விரக்தி அடைந்த அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆனந்த கண்ணீர் வடித்த ரோஹித் சர்மா.. தளபதியாக நின்று தட்டிக்கொடுத்த விராட் கோலி – நடந்தது என்ன?

இலங்கை அணியை சேர்ந்த ஜாம்பவான் சீனியர் வீரர்கள் பலரும் இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது இருக்கும் இளம் வீரர்களில் ஒரு சிலர் கூட சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு விளையாடுவதில்லை என்கிற ஒரு பேச்சும் பரவலாகவே இலங்கை அணியின் மீது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement