சித்தார்த் கவுலுக்கு சச்சின் ட்விட்டரில் பாராட்டு..! மெய்சிலிர்த்து போனேன்..! காரணம் இதுதான்..?

sachin1
Advertisement

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சித்தார்த் கவுலின் பந்துவீச்சை பாராட்டிய சச்சினிற்கு கவுல் நன்றி தெரிவித்துள்ளார்.
kaulநடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசஸ் அணியில் விளையாடிய சித்தார்த் கவுல் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தயும் ஈர்த்தார்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பின்னர் சமீபத்தில் நடைபெற்ற ஐயர்லாந்து தொடரில் இந்திய அணியின் வேக பந்து பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பஞ்சாபை சேர்ந்த இளம் வீரர் சித்தார்த் கவுர் அணியில் இடம்பெற்றார். ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 2 ஒவர்களை வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசி இங்கிலாந்து அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் முக்கிய வீரரான பட்லரின் விக்கெடும் அடங்கும். இவரின் சிறப்பான பந்துவீச்சை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டி ஒரு பதிவை ஈட்டுள்ளார்.சச்சினின் பாராட்டை கண்டு மனம் நெகிழ்ந்த சிதறாத கவுல்.”இதைவிட ஒருவருக்கு என்ன தேவை? எனது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது. நான் என்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று பெருமையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement