ஐ.சி.சி தரவரிசை : ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட சுப்மன் கில் – எந்த இடம் தெரியுமா?

Shubman-Gill
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவுக்கு பின்னர் மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் பிரத்யேகமாக தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை விவரத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரான சுப்மன் கில் நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்கள் அடித்ததன் மூலம் 750 புள்ளிகள் உடன் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து உச்சம் தொட்டுள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் இந்திய அணியின் அனுபவ வீரரான விராட் கோலி பத்தாவது இடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை தூக்கி நிறுத்திய இஷான் கிஷன் 82 ரன்கள் குவித்து 12 இடங்கள் முன்னேறி 24 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோன்று ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் முதலிடத்திலும், மிட்சல் ஸ்டார்க் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று இந்த ஆசியக்கோப்பை தொடரின் முதல் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி 4 இடங்கள் முன்னேறி 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோன்று டி20 போட்டிகளை பொருத்தவரை பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். அதேபோன்று டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement