கோலி அடுத்து ரோஹித் வேண்டாம். இவரை கேப்டன் ஆக்கலாம் அதுவே சரியாக இருக்கும் – புதிய கேப்டன் இதோ

Rohith

கொரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் விளையாட்டு மிகப் பெரும் சரிவை கண்ட நிலையில் தற்போது பல்வேறு கிரிக்கெட் நாடுகளும் சவால்களை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணி எதிர்காலம் குறித்து வலைதளங்களில் தற்போது மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக விராத் கோலிக்கு பின்னர் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

Kohli-2

ஏனெனில் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தடுமாறியது மட்டுமின்றி ஐசிசி தொடர்களில் முக்கிய போட்டிகளில் கோலி தலைமையிலான இந்திய அணி பெரும் சரிவை சந்தித்தது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி முக்கியமான போட்டிகளில் அழுத்தத்தின் காரணமாக அந்த போட்டியில் மட்டும் சொதப்பி வெளியேறுவதால் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டே தான் வருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்து படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமாக விளையாடிய விராட்கோலி அனைத்து துறைகளிலும் கேப்டனாக செயல்படுவதால் அவரது பளுவை குறைக்க ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு புதிய கேப்டன் இருக்கலாம் என்ற கருத்தும் அப்போது பேசப்பட்டது.

Rohith-2

எனினும் பிசிசிஐ வட்டாரத்தில் கோலி எப்பொழுதும் சிறந்த கேப்டன் என்றும் அவரை மாற்றும் எண்ணம் இல்லை என்ற முடிவில் இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த விவாதம் சூடுபிடிக்க தற்போது கோலிக்கு அடுத்து ரோகித் சர்மாவை கேப்டன் ஆக்குவதை விட இளம் வீரர் ஒருவரை கேப்டன் ஆக்குவதே சிறந்தது என்று பல யோசனைகளை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான கேப்டனாக செயல்படுவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Iyer-2

ஏனெனில் உள்ளூர் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வருவர் ஸ்ரேயாஸ் அய்யர். அவரது கேப்டன்சியில் அணிகள் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளன. எனவே ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரைக் காட்டிலும் இளம் வீரரான ஏன் நியமிக்க கூடாது என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. மேலும் வயதான வீரர்களை விட இளம் வீரரான இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால் இன்னும் சில காலம் கேப்டனாக பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் இந்திய ஏ ரெக்கார்டு மற்றும் ஐபிஎல் கேப்டன்ஸி ரெக்கார்டு ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டதாக தெரிகிறது.

25 வயதாகும் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உதவும் எனவே இதுவே சிறந்த முடிவு என்றும் பலரும் வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் நான்காவது இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையை இவர் வந்து மீட்டெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இவரை விரைவில் கேப்டன் ஆக்கி சில தொடர்களில் பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -