கோலி என்னிடம் கூறிய இந்த வார்த்தைகளே எனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – மனம் திறந்த ஷ்ரேயாஸ் ஐயர்

Iyer-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

toss

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் நான் இறங்கும் போதே என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதற்கு காரணம் யாதெனில் இந்திய ஏ அணிக்காக நான் இந்த மைதானங்களில் விளையாடிய ஆட்டம் எனக்கு இன்றைய போட்டியில் பெரிதளவு உதவியது.

Iyer

மேலும் விராட் கோலி என்னிடம் வந்து சில அறிவுரைகளைக் கூறினார். அதிலும் முக்கியமாக நாம் இருவரும் இணைந்து நல்ல பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும். அந்த பார்ட்னர்ஷிப் ஆனது இன்னிங்சில் இறுதி வரை செல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதோடு என்னுடன் விளையாட அவர் மிகவும் சப்போர்ட் செய்தார். நாங்கள் முதலில் 1 மற்றும் 2 ஆக ரன்கள் எடுக்க துவங்கினோம் பிறகு பவுண்டரிகளும் வந்தன.

- Advertisement -

iyer

அதன்பிறகு 250 ரன்கள் அடித்தால் வெற்றிக்கு போதும் என்று இருவரும் முடிவு செய்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக 30 ரன்கள் அதிகமாவும் வந்து விட்டது. நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது விராட் கோலி அடிக்கடி என்னிடம் ஒன்றை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். அது யாதெனில் 45வது ஓவர் வரை நீ விளையாட வேண்டும் என்று அவர் என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு உத்வேகத்தை தந்து என்னை சிறப்பாக விளையாட வைத்தது என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.