நான் ரெடி ஆயிட்டேன். ஐ.பி.எல் தொடரில் நிச்சயம் ஆடுவேன் – ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டியால் சிக்கலில் பண்ட்

iyer
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரும், டெல்லி அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான டெல்லி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால் டெல்லி அணியை வழிநடத்தும் பொறுப்பு ரிஷப் பண்ட்டிடம் வழங்கப்பட்டது.

Iyer

- Advertisement -

தனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பை சரியாக கையிலெடுத்து சாதித்துக் காட்டிய பண்ட் சென்னை அணியை வீழ்த்தியதோடு மட்டுமின்றி 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றிபெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஐபிஎல் தொடர்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டெல்லி அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துவங்க உள்ள நிலையில் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் ஒரு மாதம் ஓய்விற்கு பிறகு நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : என் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் தற்போது முழுவதும் குணமடைந்து விட்டது.

iyer 1

இன்னும் ஒரு மாதத்தில் நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராகி விடுவேன் இதனால் நான் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று விளையாடுவேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும் தனது கேப்டன் பதவி குறித்து பேசிய அவர் : எனக்கு கேப்டன் பதவி கிடைக்குமா ? என்பது உரிமையாளர்களின் கையில்தான் உள்ளது. நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

Iyer

ஏனெனில் டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை டெல்லி அணி கோப்பையை கைப்பற்றியதில்லை நிச்சயம் இம்முறை கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என ஐயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு திரும்பும் வேளையில் மீண்டும் அவர் கேப்டனாக செயல்படுவாரா ? அல்லது ரிஷப் பண்ட்டின் கேப்டன் இடத்திற்கு சிக்கல் வருமா ? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement