டூப்ளெசிஸ் மீது மைதானத்திற்குள் செருப்பு வீசிய அரசியல் போராளிகள் – வீடியோ உள்ளே

duplisis

பல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.சென்னை சூப்பர்கிங்ஸ்-கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.

jadeja2

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸ்ஸல் 36 பந்துகளில் 11சிக்ஸர் உட்பட 1பவுண்டரிகளுடன் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியின் எட்டாவது ஓவரின் முதல் பந்து வீசப்பட்ட போது மைதானத்திற்குள் ரசிகர்களோடு ரசிகர்களாக மறைந்திருந்த நாம்தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மைதானத்தை நோக்கி செருப்பு மற்றும் ஷீ-க்களை வீசினர்.வீசப்பட்ட ஷீவை தனது கையால் எடுத்து ரசிகர்களை நோக்கி சோகம் தழும்பிய முகத்துடன் பார்த்தார் டூப்ளெசிஸ்.

மற்றொரு செருப்பை ஜடேஜா கையால் அப்புறப்படுத்தினார்.இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.செருப்பு வீச்சின் காரணமாக போட்டி சிலநிமிடங்கள் தடைப்பட்டது.பின்னர் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்களை குவித்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்நிலையில் மைதானத்தில் நாம்தமிழர் கட்சியினர் காலணிகளை வீசிய விவகாரம் சமூகவலைத்தளத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

இதில் சிலர் ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை பதிவுசெய்தனர். இதில் ரசிகர் ஒருவர் சென்னை மக்களை நேசிக்கும் ஒருவருக்கா இந்த நிலைமை என்று டூப்ளெசிஸ் ஷீவை கையில் பிடித்து நிற்கும் புகைப்படத்தை பதிந்து கேள்வி கேட்டுள்ளார்.

- Advertisement -
Advertisement